செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (23:41 IST)

சிதறி கிடந்த ஜல்லிக்கற்கள்...விபத்துக்கள் நடைபெறா வண்ணம் போலீஸாரின் செயல்

karur
ஜல்லி லாரிகள் அட்டூழியம் - கரூர் பைபாஸ் ரவுண்டானாவில் சிதறி கிடந்த ஜல்லிக்கற்கள் - விபத்துக்கள் நடைபெறா வண்ணம் தாயுள்ளம் கொண்டு போக்குவரத்து போலீஸார் மற்றும் ரோந்து போலீஸாரின் செயல் தமிழக அளவில் வைரலாகி வருகின்றது.
 
கரூர் திருக்காம்புலியூர் பைபாஸ் ரவுண்டானா வழியாக கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, தாராபுரம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் கரூர் வழியாக சேலம் வழியாகவும், திண்டுக்கல் வழியாகவும் பல ஆயிரம் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று அந்த திருக்காம்புலியூர் ரவுண்டானாவினை சுற்றி ஜல்லி கற்கள் டன் கணக்கில் சிதறி காணப்பட்ட நிலையில், ரவுண்டானாவினை சுற்றி அவரவர் ஊர்களுக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஜல்லிகற்கள் மீது பயணித்தால் ஸ்லிப் ஆகி அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி விடும், அதே போல் தான்.
 
நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் அந்த ஜல்லிக்கற்கள் மீது பயணம் செய்யும் போது பிரேக் பிடித்தால் வாகனம் தறிகெட்டியோடி, அப்படியே குடை சாயும், மாநகராட்சி நிர்வாகம் இந்த ஜல்லிக்கற்களை எடுத்திருக்க வேண்டும், ஆனால் கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் புண்ணியமூர்த்தி மற்றும் போக்குவரத்து போலீஸாரும், ரோந்து போலீஸ் ஒருவரும், இளைஞர்கள் 3 பேர் என்று மொத்தம் 7 நபர்கள் கூட்டாக,  விபத்துக்கள் ஏதும் நடைபெறா வண்ணம்  இருக்கவும், பயணிகளை விபத்திலிருந்து காக்கவும் தாயுள்ளம் கொண்டு எந்த வித எதிர்பார்ப்புமின்றி கூட்டுமார்களை கொண்டு சாலைகளை கூட்டியும், மண்வெட்டி கொண்டு குவியலை சுத்தம் செய்தனர்.

இந்த செயலை அப்பகுதியினை சார்ந்தவர்கள் அவர்களது செல்போனில் வீடியோ எடுத்து கரூர் டிராபிக் போலீஸ்க்கு ஒரு சல்யூட் என்றும், வீட்டினை கூட சுத்தம் செய்திருக்க மாட்டார்கள், ஆனால் இது தான் மனிதாபிமானம் என்றும், போக்குவரத்து ஆய்வாளர் புண்ணியமூர்த்தி கூட்டுமார் கிடைக்காததால், அவருடைய ஸூ வினால் ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்திய காட்சி தமிழக அளவில் வைரலாகி வருகின்றது.