நினைச்சதை விட ஸ்பீடா இருக்கே.. இன்றே கரையை கடக்கும் புரெவி!
வங்க கடலில் உருவான புரெவி புயல் வேகமாக நகர்ந்து வருவதால் இன்று இரவே இலங்கையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி தென் தமிழக நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இலங்கையை கட்ந்த பின்னர் மன்னார் வளைகுடா வழியாக நாளை பாம்பன் – கன்னியாக்குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முன்னதாக 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று மாலையிலிருந்து இரவுக்குள்ளாக இலங்கையின் திரிகோண மலைக்கு வடக்கே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை மற்றும் தென் தமிழக பகுதிகளில் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் அதி கனமழையும், சூறைக்காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.