ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (11:57 IST)

சோபியாவின் செல்போன் முடக்கம்? அடுத்து பாஸ்போர்ட்? : நடப்பது என்ன?

விமானத்தில் பாஜகவிற்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவி சோபியாவின் செல்போன் சிம்கார்டு முடக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் சென்றபோது 'பாசிச பாஜக ஒழிக' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர் ஜாமீன் பெற்று விடுதலை ஆகியுள்ளார். 
 
அதேபோல், தன் மகள் சோபியாவுக்கு தமிழிசை மற்றும் அவருடன் இருந்த பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை அந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், சோபியா தன் அசல் பாஸ்போர்ட்டுடன் வருகிற 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தூத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளனர். 
 
இந்நிலையில், சோபியாவின் சிம்கார்டு முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கி அவர் வெளிநாடு தப்பி செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியும் நடப்பதாக சோபியாவின் தந்தை பேட்டியளித்துள்ளார்.