திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2019 (15:33 IST)

ஆற்று வெள்ளத்தில் தத்தளித்த 3 பெண்கள் – தங்கள் உயிரைத் தியாகம் செய்து காப்பாற்றிய சகோதரர்கள் !

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பெண்களைக் காப்பாற்ற தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர் இரு சகோதரர்கள் .

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஜெகன் மற்றும் குமரேசன் ஆகிய இரு சகோதரர்கள். இவர்கள் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருக்கும் கோயிலுக்கு வழிபாட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்குள்ள வைகையாற்றுக்கு குளிக்க சென்றபோது அங்கு 3 பெண்கள் ஆற்று நீரின் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துள்ளனர். அவர்களைக் காப்பாற்ற சகோதரர்கள் இருவரும் ஆற்றில் குதித்து அவர்களைக் காப்பாற்றினர். ஆனால் மறுகரைக்கு அவர்கள் திரும்பியபோது ஆற்று சுழலில் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து அவர்கள் இருவரின் உடலையும் மீட்டுள்ளனர். தங்கள் உயிரைக் கொடுத்து பெண்களின் உயிரைக் காப்பாற்றிய சகோதர்களின் தியாக உணர்வு மக்களை நெகிழச் செய்துள்ளது.