ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 18 ஆகஸ்ட் 2018 (20:13 IST)

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு: உடையும் நிலையில் பழைய பாலம்

கர்நாடக மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றுக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சில பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  
முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியில் இருந்து 2.34 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருச்சியில் உள்ள பழைய பாலம் உடையும் நிலையில் காணப்படுகிறது. 
 
காவிரி ஆற்றுக்கு 67,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து 1.90 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது.
 
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் 18 வது தூண் சரிந்துள்ளது. இதனால் பாலமே உடையும் நிலையில் காணப்படுகிறது. அப்படியே பாலம் உடைந்தாலும் வெள்ளபெருக்கு குறைந்த பின்னரே பாலம் சீரமைக்கப்படும் என தெரிகிறது.