1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (07:51 IST)

சென்னையில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் செல்லும் குடிநீர்

கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் இயல்பு நிலை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலமே சிறுசிறு தீவுகளாக மாறி முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதியில் உள்ளனர்.
 
மீட்புப்பணியினர் முடிந்தவரை வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து இரயில்களில் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேரள மக்களின் குடிநீருக்காக தெற்கு இரயில்வே சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
கேரள மாநிலம் முழுவதும் தண்ணீரால் மூழ்கியிருந்தாலும் அம்மாநில மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். சென்னையில் இருந்து ரயிலில் செல்லும் தண்ணீர் ஓரளவு கேரள மக்களின் தாகத்தை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.