அல்லு அர்ஜுன் மகளுடன் கியூட்டா டான்ஸ் போட்ட பூஜா ஹெக்டே!
2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமா துறையில் தடம் பதித்தார். அதையடுத்து உலகின் சிறந்த ஆண் அழகனும் பாலிவுட் நடிகருமான ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ படத்தில் நடித்திருந்தார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் பாலிவுட்டில் ராசிகெட்ட நடிகையாக முத்திரை குத்தப்பட்டார் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு திரையுலகில் நுழைந்தது தொட்டதெல்லாம் ஹிட் அடித்து அங்கு தற்போது முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். அவர் நடித்த 'ஆல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பூஜா ஹெக்டேவிற்கு நல்ல ரீச் கொடுத்தது.
இந்நிலையில் தற்போது தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுனின் மகளுடன் கியூட்டாக நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். இந்த சூப்பர் கியூட் டான்ஸிற்கு லைக்ஸ் அள்ளுது. இதோ அந்த வீடியோ லிங்க்....