வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (13:39 IST)

சென்னையில் தாய்ப்பால் விற்பனை படுஜோர்..! அதிகாரிகள் அதிரடி சோதனை..!!

Raid
சென்னை அரும்பாக்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
சென்னை மாதவரத்தில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து தாய்ப்பால் விற்பனை குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை மாவட்டத்தில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் சென்னை  அரும்பாக்கத்தில் உள்ள ஆர்.கே மருந்து கடையில் பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர் சோதனையில் பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. 
 
50 மில்லி கிராம் அளவுள்ள தாய்ப்பாலின் விலை 500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பவுடர் வடிவில் தாய்ப்பாலை குளிர்ச்சியாக்கி விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து தாய்ப்பால் பவுடரை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கைப்பற்றப்பட்ட தாய்பாலை கிங்க் இன்ஸ்டியூட்' ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.