1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 1 ஜூன் 2024 (13:20 IST)

தாய்ப்பால் விற்பனையை தடுக்க நடவடிக்கை..! தமிழகம் முழுவதும் 18 குழுக்கள் அமைப்பு..!!

Breast Milk
தமிழகத்தில் தாய்ப்பால் விற்பனையை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தாய்ப்பால் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் உணவு கட்டுப்பாட்டு துறையிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மாதவரத்தில், சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து முத்தையா என்பவரது கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், 50க்கும் மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய உரிமம் பெற்று, சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வருவது சோதனையில் அம்பலமானது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

 
இந்நிலையில் சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தாய்ப்பால் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் உணவு கட்டுப்பாட்டு துறையிடம் (புகார் எண் 9444042322) தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.