வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (12:19 IST)

மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன்.. மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் பெற்றோர்...!

திண்டுக்கல் அருகே 11 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்த நிலையில் அந்த சிறுவனின் பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் கிஷோர் என்பவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது மகனின் நிலை காரணமாக மீள முடியாத துயரத்தில் இருந்த போதிலும் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அந்த சிறுவனின் பெற்றோர் முன்வந்துள்ளனர்.

இதனை அடுத்து சிறுவனின் உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனையில் தானமாக அளிக்கப்பட்டது. கிஷோரின் தந்தை பழனிச்சாமி ஒட்டன்சத்திரத்தில் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran