செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (09:08 IST)

நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள்? – புத்தகம் வெளியிட்ட செயலகம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதில் எம்.பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் குறித்த புத்தகம் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. வழக்கம்போல எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எந்தெந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்ற பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஊழல், ஒட்டுக்கேட்பு, வெட்கக்கேடு ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

மேலும், அராஜகவாதி, குண்டர்கள், காலிஸ்தான், சர்வதிகாரம், வாய்ஜாலம், நாடகம், கபட நாடகம் உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.