1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (10:23 IST)

வருகிற 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பூஸ்டர் டோஸ்!

வருகிற 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது அவசியமானது என அறிவுறித்தப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் மிக வேகமாக பரவும் தன்மை உள்ளதால் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வதையும் உலக நாடுகள் ஊக்கப்படுத்தி வருகின்றனர். தற்போது டெல்டா வகை கொரோனா பரவலும் அதிகரித்துள்ளதால் பூஸ்டர் டோஸ் இந்தியாவிலும் செலுத்தப்பட உள்ளது. 
 
இந்நிலையில் வருகிற 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் எவரெஸ்ட் சிகரம் போல் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க் வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் 35,46,000 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள் எனவும் அறிவித்துள்ளார்.