ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (16:23 IST)

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்: பெரும் பரபரப்பு

Threat
திருச்சி விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திருச்சி விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாயுடன் உடனடியாக விமான நிலையம் வந்து சோதனை செய்தனர்
 
சில மணி நேர சோதனைக்கு பிறகு ஆபத்தான பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இந்த மிரட்டல் தொலைபேசி வதந்தி என்பது உறுதியாகி உள்ளது 
 
இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து பணிபுரியும் இடங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில் திடீரென மிரட்டல் வெடிகுண்டு அழைப்பு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒற்றை
 
Edited by Mahendran