1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (14:04 IST)

அஜித் பட நடிகருக்கு கொலைமிரட்டல்....போலீஸார் விசாரணை

actor bala
நடிகர் அஜித் பட நடிகர் பாலாவுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின்  பிரபல நடிகர் பாலா. இவர் கலிங்கா, மஞ்சள் வெயில், அன்பு, வீரம், தம்பி உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ளவர் பாலா.

சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா  வீரம் படத்தில் நடிகர் அஜித்குமாரின் தம்பியாக  நடித்துப் பிரபலமானார்.

இவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த  நிலையில்,   நடிகர் பாலாவின் வீட்டு கேட்டைத் தாண்டி உள்ளே குதித்துக் கதவைத் தட்டி மர்ம நபர்கள் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  நடிகர் பாலா, கொச்சி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் மிரட்டல் விடுத்த கும்பலை தேடி வருகின்றனர்.