ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (11:25 IST)

ஒரே நேரத்தில் 6 பள்ளிகள், 2 கல்லூரிகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! - திருச்சியில் அதிர்ச்சி!

bomb threat

திருச்சியில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்றும் வெடிக்குண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 

 

இந்நிலையில் நேற்று திருச்சியில் உள்ள பாரதிதாசன் சாலை, மேலப்புதூர், மன்னார்புரம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 பள்ளிகளுக்கும், சிங்காரத்தோப்பில் உள்ள 2 கல்லூரிகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்துள்ளது. இமெயிலில் வந்த இந்த மிரட்டல் குறித்து பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
 

 

உடனடியாக பள்ளி, கல்லூரிகளில் காவல்துறை சோதனை நடத்தியதில் மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இந்நிலையில் இன்றும் நேற்று மிரட்டல் விடுக்கப்பட்ட அதே பள்ளிகளில் 6 பள்ளிகளுக்கும், 2 கல்லூரிகளுக்கும் இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 

இதனால் போலீஸார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், இமெயில் அனுப்பிய ஆசாமியை கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K