1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (14:44 IST)

இன்று ஒரே நாளில் 8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! காந்தி ஜெயந்தி தினத்தில் பரபரப்பு..!

Train
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இடையிடையே வெடிகுண்டு மிரட்டல் வருவது வழக்கமாகி வருகிறது. இந்த மிரட்டல்களுக்கு பின்னர் சோதனை செய்யப்பட்ட போது அவை பொய்யானதாக இருப்பதை காண்கிறோம். 
 
அதேபோல், இன்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள எட்டு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஜ்மீர், உதய்பூர், ஆல்வார் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த மிரட்டல்களுக்கு பின்னர் சோதனை நடத்தப்பட்டபோது, அவை பொய்யானது என ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மிரட்டல் காரணமாக, சில ரயில்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பட்ட இந்த மிரட்டலால், அனைத்து ரயில் நிலையங்களிலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பின் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டதால், ராஜஸ்தான் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."
 
 
 
Edited by Mahendran