ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2017 (11:30 IST)

மறைந்த அசோக்கின் மனநிலையில்தான் அஜித் இருந்தார்; அதிர்ச்சி அளித்த பிரபல இயக்குநர்

இயக்குநர் சுசீந்திரன் அடுத்த முதல்வராக அஜித், கமல் வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலையை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் பரபரப்பான கருத்துக்களை கூறி வருகிறார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடவுள் படத்தின் போது அன்புச் செழியனால் தற்போது தற்கொலை செய்து கொண்ட அசோக்கின் மனநிலையில்தான் நடிகர் அஜித் இருந்தார் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இயக்குநர்கள்  லிங்குசாமி மற்றும் கவுதமேனன் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்று கூறியது சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.  இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில்...
அதாவது சினிமாத்துறையில் இருந்து அடுத்த முதல்வராக வர தகுதியானவர்கள் யார் என்ற கேள்விக்கு தனது பதில் கமல்  மற்றும் அஜித் வந்தால் நன்றாக இருக்கும் என்று சுசீந்திரன் கூறியுள்ளார். இவ்வாறு சுசீந்திரன் கூறியிருப்பது கமல்ஹாசன் மற்றும் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.