வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 மே 2024 (11:03 IST)

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் அதில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே  ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள தனியார் கல்குவாரியில் இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது வெடிமருந்துகள் வெடித்து சிதறின என்றும், இந்த வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலியானதாகவும், 2 வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் சென்றாலும், சம்பவ இடத்தில் வெடிமருந்துகள் இருப்பதால் அந்த பகுதிக்கு தீயணைப்புத்துறையினர், போலீசார் செல்ல முடியாத நிலை இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் வெடி விபத்தால் அப்பகுதியை சுற்றி, 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran