1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (13:25 IST)

விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு: நீதிபதி அதிரடி உத்தரவு..!

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை விநியோகித்ததாக விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
 
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாணிக்கம் தாகூர் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் மற்றும் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுகின்றனர் என்பதும் மூவருக்கும் சரியான போட்டி இந்த தொகுதியில் இருப்பதாக கருத்துக்கணிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran