திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 மே 2021 (12:41 IST)

இந்தியாவில் 11,717 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று! – தமிழக நிலவரம் என்ன?

இந்தியாவில் கொரோனா தொடர்ந்து பரவி வரும் கரும்பூஞ்சை தொற்றால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள கரும்பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளை, மஞ்சள் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. மே 25 வரை இந்தியா முழுவதும் 11,717 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் 2,859 பேருக்கும், மகாராஷ்டிராவில் 2,770 பேருக்கும் கரும்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 236 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று உறுதியாகியுள்ளது.