வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 ஜூன் 2023 (14:53 IST)

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருசில மணி நேரங்களில் கைது..!

central
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஒரு சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் உள்ள முக்கிய தலைவர்களின் வீடுகள் உள்பட பல இடங்களில் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வருகிறது என்பதும் பெரும்பாலும் இவை வதந்தியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து போலீசார் அதிரடியாக அந்த மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை செய்தனர் 
 
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ராமலிங்கம் என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர், ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவ்வப்போது அவர் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ளதாகவும் புறப்படுகிறது.
 
இருப்பினும் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva