கோபேக் மோடி பாகிஸ்தான் சதி – ஹெச் ராஜாவின் அட்மின் கருத்து !

Last Modified புதன், 6 மார்ச் 2019 (11:08 IST)
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோபேக் மோடி எனும் ஹேஷ்டேக் டிரண்ட் ஆகி வருவதால் அது குறித்த புதுக் கருத்தை தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு எதிராகக் கருப்புக்கொடிக் காட்டுவதும் சமூக வலைதளங்களில் கோபேக் மோடி எனும் ஹேஷ்டேக்கை டிரண்ட் செய்வதும் சமீபகாலமாக நடந்து வருகின்றது. சமீபத்தில் மூன்று முறை அவர் தமிழகம் வந்தபோதும் இது நடந்தேறியது. தமிழகத்தைத் தொடர்ந்து கேரளா, ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட சில வட மாநிலங்களிலும் மோடிக்கு எதிர்ப்பாக கருப்புக்கொடி காட்டுதல் மற்றும் சமூக வலைதளங்களில் ஹேஷேடேக் உருவாக்குதல் ஆகியவை நடந்து வருகின்றன. இதற்காக பிரதமர் மோடி வருகையின் போது கருப்பு நிற உடை மற்றும் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வெல்கம்  மோடி உள்ளிட்ட சில ஹேஷ்டேக்குகளை உருவாக்கினாலும் அவை எதுவும் இந்த அளவுக்கு எடுபடவில்லை. இந்நிலையில் இன்று நான்காவது முறையாக தமிழகம் வர இருக்கும் மோடிக்கு எதிராக ஆங்காங்கே சில இடங்களி கருப்புக்கொடிக் காட்டும் போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அதுபோல இப்போதே கோபேக் மோடி டிரண்ட் ஆக ஆரம்பித்துள்ளது.


மக்களின் இந்த தொடர் ஏதிர்ப்பு மோடி மீதும் பாஜக மீதுள்ள அதிருப்தியையுமேக் காட்டுகிறது. ஆனால் இதுபற்றிக் கண்டுகொள்ளாத பாஜகவினர் வழக்கம்போல கோபேக்மோடி பாகிஸ்தான் ஹேஷ்டேக்கும் பாகிஸ்தான் சதி என மடைமாற்றி விட ஆரம்பித்துள்ளனர். பாஜகவின் தேசிய செயலாளரும் சர்ச்சைகளின் நாயகனுமான ஹெச் ராஜா அல்லது அவரின் அட்மின் இதுசம்மந்தமாக முகநூலில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் ’ மோடி கோ பேக் " தமிழக கோஷம் அல்ல என்கிற உண்மையை தமிழகத்தில் எங்கு சென்றாலும் உணர முடியும். நாம் யோசிக்க வேண்டிய விஷயம் இந்த அந்நியச் சக்திகளுடன் திமுக கூட்டணியினர் கைகோர்த்துள்ளது தான். இந்தத் தேர்தலில் இக்கும்பலை வேரோடு வீழ்த்துவதுதான்’ எனத் தெரிவித்துள்ளார்.
 
அதற்கு ஆதாரமாக செய்திதாள் கட்டிங்க் ஒன்றையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அதில் வந்துள்ள செய்தி எந்த பத்திரிக்கையில் வந்தது என்றோ எப்போது வந்தது என்றோ எந்த தகவலும் குறிப்பிடவில்லை.இதில் மேலும் படிக்கவும் :