தேமுதிக சார்பில் முக்கிய அறிவிப்பு...
விஜயகாந்த் தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் வரும் மார்ச் 5 ஆம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
கூட்டணி குறித்து தேமுதிக இறுதிக்கட்ட முடிவு விரைவில் அறிவிக்க வேண்டும் என அதிமுக தெரிவித்துள்ளது.எனவே இன்று காலை மாவட்ட செயலாளர்கள்,உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் ஆலோசனையில் தேமுதிக தலைவர் கலந்து கொண்டு முக்கிய முடிவு குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் தேமுதிக நாளை மறுநாள் ( மார்ச் 5ஆம் தேதி ) கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தேமுதிக தலைமை தற்போது அவரசமாக அறிக்கை விடுத்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணியின் சார்பில் மார்ச் 5 - ல் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் மார்ச் - 5 ஆம் தேதி தேமுதிக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.