1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜூலை 2022 (19:23 IST)

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: பாஜகவின் போராட்டம் அறிவிப்பு!

annamalai
மின்கட்டண உயர்வுக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து அதிமுக போராட்டம் அறிவித்த நிலையில் தற்போது பாஜக போராட்டம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்ததை அடுத்து பொதுமக்களுக்கு மின்சாரத்தை விட அதிகமாக ஷாக் அடித்து உள்ளது 
 
ஆனால் இந்த மின் கட்டண உயர்வு குறித்து திமுகவின் தோழமை கட்சிகள் வாயை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக போராட்ட தேதியை அறிவித்த நிலையில் தற்போது பாஜக போராட்டத்தை அறிவித்துள்ளது
 
மின்கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெறாவிட்டால் ஆளும் திமுக அரசை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் ஜூலை 23ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
நாளை மறுநாள் நடைபெறும் இந்த போராட்டம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்