1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated: திங்கள், 21 நவம்பர் 2022 (17:01 IST)

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

Annamalai
தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார் 
 
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில உளவுத்துறை உறக்க நிலையில் உள்ளது என்றும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்
 
மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில் ஷாரிக் என்பவர் போலி அடையாள அட்டைகளை காட்டி கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது என்றும் தமிழகத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் இன்று முதல் நாளில் இருந்தே தமிழக பாஜக மட்டுமே கூறி வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் ஷாரிக் கோவையில் தங்கியிருந்தது தண்டனையை இன்றி செயல்படும் தமிழ்நாடு பயங்கரவாதிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் ஆனால் அதே தமிழ்நாடு அரசு மறுக்கிறது என்றும் பதிவு செய்துள்ளார்
 
Edited by Mahendran