செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified திங்கள், 21 நவம்பர் 2022 (22:47 IST)

''தமிழுக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பு''! ஒளவை நடராஜன் மறைவு குறித்து அண்ணாமலை டுவீட்

தமிழறிஞர் ஒளவை நடராஜன் மறைவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் டுவீட் பதிவிட்டுள்ளார்.

நாடறிந்த தமிழறிஞரும் மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்  தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஒளவை நடராஜன்.

இவர், கடந்த 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்தார்..

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவ்வை நடராஜன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 85 ஆகும்.

அவரது மறைவுக்கு தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில்,’’மிகச் சிறந்த தமிழறிஞரும், சிந்தனையாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமாகிய மதிப்பிற்குரிய திரு. அவ்வை நடராஜன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன் அவரது மறைவு, தமிழுக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!’’என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj