திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (10:17 IST)

தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை பாஜக மட்டுமே நிரப்பும்: பொன்ராதாகிருஷ்ணன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் தகுதி பாஜக கட்சிக்கு மட்டுமே இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூரியுள்ளார்.


 

 
 
கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக, தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் தங்களுடைய கட்சி பிரச்சனையை தீர்க்கவே கவனம் செலுத்துவதாகவும், மக்களின் பிரச்சனைகள் கிடப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
எனவே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் தகுதி பாஜகவுக்கு மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார். 'மெர்சல்' பிரச்சனைக்கு பின்னர் பாஜகவுக்கு அதிகளவில் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.