வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

அடுத்த 40 ஆண்டுகள் பாஜக ஆட்சி தான், தமிழகத்திலும் விரைவில் ஆட்சி: அமித்ஷா

Amitshah
அடுத்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிதான் என்றும் தமிழகத்திலும் விரைவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நேற்று அமித்ஷா உரையாற்றினார். இந்த கூட்டத்தில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு பாஜகவின் சகாப்தமாக தான் இந்தியா இருக்கும் என்றும் இந்த காலகட்டத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்தார்
 
மேலும் தெலுங்கானா, மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் என்றும் அமித்ஷா உறுதியுடன் கூறினார். குடும்ப ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்றும் விரைவில் பாரதிய ஜனதா ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.