1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP Narayan Thirupathi says about Thirumavalavan

ரிமாண்ட் செய்ய வேண்டும் என கூறிய திருமாவளவனுக்கு பாஜக பிரமுகர் பதில்

திருமாவளவன்
வேல் யாத்திரை என்ற பெயரில் தினமும் தடையை மீறும் பாஜகவினரை ரிமாண்ட் செய்ய வேண்டும் என கூறிய திருமாவளவனுக்கு பாஜக பிரமுகர் நாராயண் திரிபாதி பதிலடி கொடுத்துள்ளார்.
 
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்பட்ட நிலையில் இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இருப்பினும் தடையை மீறி தினந்தோறும் தமிழக பாஜக தலைவர்கள் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர் என்பதும் அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் வேல் யாத்திரை என்ற பெயரில் தினமும் தடையை மீறும் பாஜகவினரை ரிமாண்ட் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் திருமாவளவனின் இந்த கோரிக்கை குறித்து பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: 
 
ஹிந்துக்களை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் உள்ள திமுகவினரை, தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும்  திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்பதாலேயே வேல் யாத்திரை. முதலில் அது நடந்தால், உங்களின் கோரிக்கைக்கு அவசியமில்லை
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவின் பொறுப்பற்ற அதிபர் டிரம்ப் - ஜோ பைடன் குற்றச்சாட்டு