தொடர்புடைய செய்திகள்
- வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்கள், ரூ.4000 பணம்: திமுகவினர் மீது அதிமுக புகார்..!
- வாக்குச்சாவடிக்கு அருகே வாக்கு சேகரிப்பு: திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்...!
- 25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு
- எதிர்கட்சிகள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
- ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.. ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!
மதியம் 1 மணிக்குள் 45% வாக்குப்பதிவு.. மாலைக்குள் 60%ஐ தாண்டும் என எதிர்பார்ப்பு..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதியம் ஒரு மணிக்குள் சுமார் 45 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் மாலைக்குள் 60% வாக்குப்பதிவை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,27,547 என்றும் ஆண் வாக்காளர்கள் 1,11,025 என்றும் பெண் வாக்காளர்கள் 1,16,497 என்றும் திருநங்கை வாக்காளர்கள் 25 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மொத்த வாக்காளர்களில் சுமார் 45 சதவீதம் வாக்காளர்கள் அதாவது 1,01,392 பேர் மதியம் ஒரு மணிக்குள் வாக்களித்து விட்டதாகவும் இன்னும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் 60% தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக முதல் முறையாக ஓட்டு போடும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருகிறார்கள்
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்பாராத முடிவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
