1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (17:08 IST)

குடியுரிமை ஆதரவு போராட்டம்: வில்லங்கமாய் களமிறங்கிய பாஜக!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக பாஜக முன்னால் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்தார். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து போராட்டம் நடக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.  
 
அதன்படி தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குடியுரிமை சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பாஜகவினர் ஆர்பாட்டத்தின் போது குற்றச்சாட்டி வருகின்றனர்.