வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (12:23 IST)

வருமானவரி சோதனை எதிரொலி: டெல்லியில் மனு கொடுத்த திமுக எம்பி!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது
 
ஏற்கனவே திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சமீபத்தில் திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் திமுக வேட்பாளர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு வேண்டுமென்றே திமுக நிர்வாகிகள் அலுவலங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடக்கும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது