செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (09:24 IST)

பணத்திற்காக கடத்தல் முயற்சி.. விபரீதமான நடந்த கொலை! – திண்டுக்கல்லில் அதிர்ச்சி!

திண்டுக்கலில் தொழிலதிபர் ஒருவருடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம் நடத்த முயன்று அது கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கலில் பழனி பைபாஸ் சாலையில் பார்க்கிங் மற்றும் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார் தொழிலதிபர் ராம்குமார் என்பவர். இவர் வாடகைக்கு விட்ட கடைகளில் ஒன்றை சிவராஜ் என்பவர் தண்ணீர் சுத்திகரிக்கும் ப்ளாண்ட் அமைப்பதற்காக வாடகைக்கு எடுத்துள்ளார்.

நிறைய கடைகளை வாடகைக்கு விட்டுள்ளதால் ராம்குமாரிடம் நிறைய பணம் இருக்கும் என்று எண்ணிய சிவராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராம்குமாரை கடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி பார்க்கிங் வளாகத்தை பூட்டி விட்டு ராம்குமார் வீடு திரும்பி கொண்டிருந்தபோது வழியில் மடக்கி சிவராஜ் கும்பல் கடத்த முயன்றுள்ளனர். ஆனால் ராம்குமார் முரண்டு பிடித்து எதிர்த்து தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவரை அச்சுறுத்துவதற்காக அரிவாள் உள்ளிட்ட ஆயுத்தத்தால் கீற முயன்றுள்ளனர். ஆனால் காயம் பலமாக பட்டதால் ரத்தம் அதிகமாக வெளியேறி ராம்குமார் மயங்கி விழுந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிவராஜ் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராம்குமாரை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராம்குமார் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிவராஜ் மற்றும் கூட்டத்தினரை கைது செய்துள்ளனர்.