நாளை தமிழகம் வருகிறார் ஜே.பி.நட்டா: கூட்டணி பேச்சுவார்த்தையா?
பாஜக தலைவர் தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை தமிழகம் வரவேற்பதாக வெளிவந்திருக்கும் செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். சமீபத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தந்து மூன்று நாட்கள் தொடர் பிரச்சாரம் செய்தார்
இந்த நிலையில் நாளை பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகம் தமிழகம் வருகிறார். அவர் நாளை இரவு மதுரை வருவதாகவும் ஜூன் 30-ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார் என்றும் 31ஆம் தேதி புதுவை பாரதியார் சிலைக்கு மரியாதை செய்யவுள்ளாஅர் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது
நாளை தமிழகம் வரும் ஜேபி நட்டா அவர்கள் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடம் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது