1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 மார்ச் 2018 (16:07 IST)

அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி - பழனியில் பரபரப்பு

அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழகர் முதல்வர் பதவி ஓ.பி.எஸ்-க்கு சென்றது. அதன் அவரை ராஜினாமா செய்ய வைத்த சசிகலா, அந்த பதவிக்கு ஆசைப்பட்டார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார்.
 
ஆனால், ஆளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பாஜகவிற்கு அடிபணிந்து செயல்படுகிறது என்கிற கருத்தை திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் கூறி வருகின்றனர். ஆனால், அதை எடப்பாடி-ஓபிஎஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது.
 
இந்நிலையில், பழனி அருகே மானூரில் அதிமுக கொடி கம்பத்தில் பாஜகவின் கொடி ஏற்றப்பட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் இன்று வெளியானது.
 
இதன் மூலம் தமிழகத்தில் பாஜக ஆட்சிதான்  நடைபெறுகிறது என்பது உறுதியாகியுள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.