1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (21:02 IST)

சென்னையில் பாஜக முதல்வெற்றி..தொண்டர்கள் மகிழ்ச்சி

இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், ஆளுங்கட்சியாக திமுக பெரும்பானையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவிகள் வெளியாகியுள்ள நிலையில், 22 மாநகராட்சி வார்டுகள்,  நகராட்சியில் 56 வார்டுகள் பேரூராட்சியில் சுமார் 230 வார்டுகளை   தற்போது வரை பாஜக கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில்,திமுக சென்னை மா  நகராட்சியில் 146 வார்டுகளைக் கைப்பற்றியுள்ள நிலையில்  134 வது வார்டில் சுமார் 5539 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே, தமிழகத்தில் பாஜக 3 வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.