1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 மே 2024 (07:59 IST)

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பா.ஜ.க. தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த நிலையில் எந்தக் காரணமும் இல்லாமல் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என கேசவ விநாயகம் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என மனுவில் கூறியுள்ள  கேசவ விநாயகம் 4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
தமிழக பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி சி.சரவணன் முன்பு கேசவ விநாயகத்தின் முன் விசாரணை விசாரணைக்கு வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva