1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 மே 2024 (07:27 IST)

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இருவரும் ஆஜராக உள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்.6ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கம் சிக்கியது.  இந்த விவகாரத்தில் பிடிபட்ட மூன்று நபர்கள் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்காக பணம் கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்த நிலையில் நயினார் நாகேந்திரன் உள்பட அவரது தரப்பினர் சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

மேலும் தேர்தல் முடிவுக்கு முன்பே இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி முடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva