1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 மே 2024 (21:33 IST)

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தலுக்கு முன் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல வியூகங்கள் அமைத்த நிலையில் 5 கட்ட தேர்தல் முடிந்த பிறகு பாஜகவை வீழ்த்த இது ஒன்றுதான் வழி என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கடந்து பத்து ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் பலமாக ஆட்சியில் இருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை ஆட்சியில் பிடிக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி பாஜகவுக்கு இணையான வெற்றியை பெற வாய்ப்பே இல்லை என அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில் பாஜகவை வீழ்த்துவதற்கான வழியை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் இஸ்லாமிய வாக்காளர்களுக்கும் பாஜகவுக்கு வாக்களிக்காத நான்கு வகையான இந்து வாக்காளர்களுக்கும் இடையே கூட்டணி ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நான்கு வகையான இந்து வாக்காளர்கள் என்பது காந்தியவாத இந்துக்கள், அம்பேத்கரிய இந்துக்கள், கம்யூனிஸ்ட் இந்துக்கள் மற்றும் சோசலிச இந்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நான்கு வகை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகியவர்களை கொண்ட கூட்டணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று அறிவித்து தெரிவித்துள்ளார்.

ஆனால் காலம் கடந்து அவர் ஐந்து கட்ட தேர்தல் முடிந்ததும் இதை அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva