வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 3 நவம்பர் 2023 (15:50 IST)

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

amar prasath reddy
அமர்பிரசாத் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து செங்கல்பட்டு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து வழக்கிலும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி  அண்ணாமலை  நடைப்பயணத்தின்போது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கிலும்  அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

என் மண் என் மக்கள் பயணத்தின்போது போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.  அவருக்கு   நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.

அடுத்தடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமர்பிசாத் ரெட்டி மற்றொரு வழக்கில்  ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு (நவம்பர் 4 ஆம் தேதி) ஒத்தி வைத்து செங்கல்பட்டு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.