வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (09:05 IST)

அதிமுக - திமுக வினர் இடையே மோதல் ....எம்பி. கன்னத்தில் பளார் ...பத்திரிக்கையாளர் செல்பொன் பறிமுதல்...

திருச்சி பொன்மலைபட்டியில் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான  மதில் சுவர் இருந்தது. திமுகவினர் ரெயில்வே சுவரில் கட்சி விளம்பரம்  ஒட்டியிருந்தனர். அதன் அருகில் கொடிக்கம்பமும் இருந்தது. இந்நிலையில் திருச்சி தொகுதி அம்.பி. குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கிழ் நிழற்குடை அமைக்க முடிவெடுத்தார். அதற்காக திமுகவினர் பயன்படுத்திய மதிற்சுவரை இடிக்க முடிவெடுத்து பொக்லைன் கொண்டு இடித்தனர்.
அப்போது திமுக பகுதி செயளரான தர்மராஜின் அண்ணன் பெரியசாமி இதைப் பற்றி கேட்டுள்ளார். ஆனால் எம்.பி.குமார் இதை கேட்க நீ யார்..? என்று கேட்டுள்ளார். இதனால் இரு பிரிவினருக்கு இடையே பிரச்சனையாக உருவெடுத்தது. பெரியசாமை தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன் கோபி. ஆவேசத்துடன் சென்று எம்பி.குமாரை கன்னத்தில் ஓங்கி அடித்தார். 
 
இதனால் எம்.பி தாக்கப்பட்டதை அறிந்த அதிமுகவினர் உருட்டுக்கட்டைளுடன் திரண்டு வந்து திமுகவினரை சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு திமுகவினரும் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீஸாருக்கு தகவல்  கிடைத்தது. உடனே விரைந்து வந்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் போலீஸாரும் விரைந்தனர். 
 
இதனையடுத்து அதிமுகவினரின் போக்கை தடுக்காத போலீஸார் திமுகவினரான தர்மராஜ், கோபி, பிரபாகரன் உள்ளிட்டோரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
 
இந்த தாக்குதல் சம்பவத்தில்  காயம் அடைந்த எம்பி.குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும் இந்த தாக்குதலை புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளர்களை அதிமுகவினர்  தாக்கியதோடு அல்லாமல் அவர்களின் கேமரா, செல்போன்களையும் பறித்தனர். பின்னர் பத்திரிக்கையாளர்கள்  போலீஸ் கமிஷனர் வாகனத்தின் முன் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். அதன் பின்னர் செல்பொன் அவர்களுக்கு திரும்ப தரப்பட்டது.
 
,