புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (11:14 IST)

ஓபிஎஸ்-க்கு போட்ட ஸ்கெட்சா இது... பாஜகவுடன் சேர்ந்த ஈபிஎஸ்; பலிகடா தங்க தமிழ்ச்செல்வன்!

தங்க தமிழ்ச்செல்வனை பாஜகதான் இயக்குகிறது என்றும் தமிழகத்தில் நடக்கும் அனைத்தும் அமித் ஷாவின் வியூகங்கள் என்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதிமுக சசிகலா அணி, ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரண்டாக பிரிந்த போது நமது அம்மா அதிமுகவின் அதிகாப்பூர்வ நாளிதழாக மாறியது, அதேபோல் நமது எம்ஜிஆர் தினகரனின் நிர்வாகம் வசம் சென்றது. தற்போது தங்க தமிழ்ச்செல்வன் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நமது எம்ஜிஆர் இது பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
நான் யார் நீ யார் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த கட்டுரையில் தங்க தமிழ்ச்செல்வனை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வத்தை முடக்க பாஜகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
அதேபோல், இந்த நகர்வுகளுக்கு பின்னணியில் பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத்கு, தங்க தமிழ்ச்செல்வன் அவரின் பேச்சை கேட்டுத்தான் இவ்வாறு செய்து வருகிறார் என்றும் வெளிப்படையாக நமது எம்ஜிஆர் நாளிதழில் எழுதப்பட்டுள்ளது. 
 
ஆக மொத்தம் ஓ.பன்னீர்செல்வத்தை காலி செய்யவே இவ்வாற நகர்வுகள் நகர்த்தப்படுகின்றது என கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.