திங்கள், 10 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:05 IST)

போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் மசோதா!

தமிழக சட்டசபையில் போலிப் பத்திரப் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போலியாக ஒருவர் பத்திரப் பதிவு செய்திருந்தால் அந்த நிலத்திற்கு உரிமை கோருபவர்கள் அதனை நீதிமன்றம் மட்டுமே சென்று ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், இனிமேல் பத்திரவுப் பதிவுத் தலைவரே போலிப் பத்திரப் பதிவை ரத்து செய்வதற்கான அதிகாரம் வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.