சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென எரிந்த பைக்: பரபரப்பு தகவல்
சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென எரிந்த பைக்: பரபரப்பு தகவல்
கடந்த சில நாட்களாக டூவீலர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மின்சார பைக்குகள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த டூவீலர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து வாகன ஓட்டுநர் தீயை அணைக்க முற்பட்டபோதும் தீயை அணைக்க முடியாததால் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.