செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மே 2022 (10:56 IST)

நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து; 7 பேர் பலி! – பிலிப்பைன்ஸில் பயங்கரம்!

Fire
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் சென்றுக் கொண்டிருந்த சிறிய ரக கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலிலியா தீவிலிருந்து ரியல் நகரத்தில் உள்ள துறைமுகம் நோக்கி 135 பயணிகளை சுமந்து கொண்டு சிறிய ரக கப்பல் ஒன்று பயணித்துள்ளது. கடலில் சென்றுக் கொண்டிருந்தபோது படகு என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கப்பல் கடலிலேயே நின்ற நிலையில் கப்பலின் மேற் பகுதிகளிலும் தீப்பிடித்துள்ளது. தீயை கண்ட பலர் பயந்து கடலில் குதித்துள்ளனர். கப்பலில் வெளியேறிய கரும்புகையால் பலர் மூச்சுவிட முடியாமல் உள்ளே சிக்கியுள்ளனர்.

இந்த விபத்தில் கப்பலில் இருந்த 7 பேர் உடல் கருகி இறந்துள்ளனர். 4 பேரை காணவில்லை என தெரிய வந்துள்ளது. கப்பலில் இருந்த மீத மக்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.