திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (21:27 IST)

உதயநிதி பாணியில் பீகாரில் செங்கல் போராட்டம்!

உதயநிதி பாணியில் பீகாரில் செங்கல் போராட்டம்!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என ஒரு செங்கலை எடுத்து காட்டி நடத்திய ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் உதயநிதி பாணியில் பீகார் மாநிலத்தில் உள்ள தர்பாங் என்ற பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க செங்கல் ஏந்தி அந்த பகுதி மக்கள் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
2020ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதி தெரிவித்திருந்த நிலையில் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை என்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதி பாணியில் நடந்து வரும் இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது