செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (12:45 IST)

மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் – பாக்கியராஜ் சர்ச்சை பேச்சு!

bhagyaraj
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறித்து நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி இருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதேசமயம் அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளை கூறி வந்தனர்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது இயக்குனர் பாக்கியராஜ் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ் “பிரதமர் மோடியை மக்கள் மனதில் வைத்துள்ளனர். பிரதமர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர்.

ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன். இதுபோன்ற எனர்ஜியான பிரதமர் நாட்டுக்கு தேவை. பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.