வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (08:36 IST)

வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்! – பரிவர்த்தனை பணிகள் பாதிப்பு!

வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்! – பரிவர்த்தனை பணிகள் பாதிப்பு!
வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கம் இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு வங்கிகளை தனியார்மயமாக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் நிலையில் பல்வேறு வங்கி பணிகள் பாதிக்கப்படுவதுடன், மக்களும் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.