வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 மார்ச் 2021 (15:57 IST)

திமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்.எல்.ஏ! – உடனே அலாட் செய்யப்பட்ட சீட்!

திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவணன் காலையில் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவ்ருக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாலர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக உள்ள திமுகவை சேர்ந்த சரவணனுக்கு தற்போதைய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் திமுகவிலிருந்து விலகியுள்ள எம்.எல்.ஏ சரவணன் இன்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இன்று காலை அவர் பாஜகவில் இணைந்த நிலையில் பாஜகவுக்கு வழங்கப்பட்ட கூட்டணி தொகுதியான மதுரை வடக்கு தொகுதியின் வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னால் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து 24 மணி நேரத்திற்கு எம்.எல்.ஏ சீட் வாங்கியது குறிப்பிடத்தக்கது.