திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (13:20 IST)

123 ஆண்டுகளில் அக்டோபரில் குறைவான மழை: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்..!

கடந்த 123 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் குறைவான மழை பெய்த வருடங்களில் 2023 ஆம் ஆண்டும் ஒன்று என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று கூறிய அவர்  123 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக அக்டோபரில் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும்  இன்றுடன் முடிவடையும் அக்டோபர் மாதத்தில் 98 மில்லி மீட்டர் மழை மட்டுமே தமிழகத்தில் பதிவு செய்ய பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது இயல்பை விட 43 சதவீதம் குறைவு என்றும் அவர் கூறியுள்ளார்.  

அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிகமாகவும் ஆறு மாவட்டங்களில் இயல்பாகவும்,  16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Edited by Mahendran